இந்தியா
பிக் பாஸ் விஜய் சேதுபதிக்கு சிக்கல்; காரைக்குடியில் காவல்நிலையத்தில் புகார்
பிக் பாஸ் விஜய் சேதுபதிக்கு சிக்கல்; காரைக்குடியில் காவல்நிலையத்தில் புகார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து அவதூறு பரப்பப்பட்டதாக நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் தமிழ் பிக் பாஸ் 8-ஆவது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் டைல்ஸ் தொடர்பாக தீபக் என்பவர் பேசியது சர்ச்சையானது.
உலகப் பிரசித்தி பெற்ற செட்டிநாட்டு பாரம்பரிய ஆத்தங்குடி டைல்ஸ் உண்மையானது இல்லை என்றும், கேஏஜி டைல்ஸ் தான் அசல் ஆத்தங்குடி டைல்ஸ் என்றும் அவர் பேசியதாக காரைக்குடியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் பார்த்திபனிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தனர்.
தவறான தகவலை பதிவிட்டு, அதனை ஒளிபரப்பிய தனியார் நிறுவனம் மீதும், நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.