வணிகம்
444 நாட்கள் முதலீடு தான்..! அசத்தில் வட்டி வழங்கும் SBI அம்ரித் விருஷ்டி திட்டம்.. சிறப்புகள் என்ன?
444 நாட்கள் முதலீடு தான்..! அசத்தில் வட்டி வழங்கும் SBI அம்ரித் விருஷ்டி திட்டம்.. சிறப்புகள் என்ன?
கஸ்டமர்களுக்கு அட்டகாசமான சேமிப்பு வாய்ப்புகளை அளிப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அம்ரித் விருஷ்டி என்ற ஒரு குறுகிய கால நிலையான டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 16ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த தனித்துவமான திட்டம் சிறந்த வட்டி விகிதம் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு பிரத்தியேகமான பலன்களை அளிக்கிறது. இது இந்தியாவில் வசிக்கும் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆகிய இருவருக்கும் நன்மைகளை அளிக்கிறது.
அம்ரி விருஷ்டி திட்டம் என்பது 444 நாட்கள் கால அளவு கொண்ட ஒரு டேர்ம் டெபாசிட் திட்டம். இது ஒரு ஆண்டுக்கு 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் சீனியர் சிட்டிசன்களுக்கு இத்திட்டத்தில் 7.75 சதவீத அதிக வட்டி கிடைக்கிறது.
3 கோடி ரூபாய்க்கும் குறைவான உள்நாட்டு ரீடெயில் டேர்ம் டெபாசிட்
புதிய டெபாசிட் மற்றும் ஏற்கனவே இருக்கும் டெபாசிட்டுகளை புதுப்பித்தல்
டேர்ம் டெபாசிட் மற்றும் ஸ்பெஷல் டேர்ம் டெபாசிட்டுகள்
இந்த திட்டத்தில் SBI ஊழியர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்களின் ரெக்கரிங் டெபாசிட்டுகள், வரி சேமிப்பு டெபாசிட்டுகள், ஆண்டுவாரியான டெபாசிட், மல்டி ஆப்ஷன் டெபாசிட்டுகள், NRI டெபாசிட்டுகள் போன்றவை பொருந்தாது.
குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாய்.
அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது.
பொதுவான கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 7.25%
சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு ஆண்டுக்கு 7.75% வட்டி வழங்கப்படும்.
டேர்ம் டெபாசிட்கள்: ஒவ்வொரு மாதம், 3 மாதங்களுக்கு ஒரு முறை, அல்லது வருடத்திற்கு இரண்டு முறை
ஸ்பெஷல் டேர்ம் டெபாசிட்டுகளுக்கு மெச்சூரிட்டியின் பொழுது வழங்கப்படும்.
5 லட்ச ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு 0.50 சதவீத அபராதம்.
5 லட்சம் ரூபாய்க்கு மேல் 3 கோடி ரூபாய்குள்ளாக இருக்கும் டெபாசிட்களுக்கு 1% அபராதம்
7 நாட்களுக்கு முன்பு வித்டிரா செய்யப்படும் டெபாசிட்களுக்கு வட்டி வழங்கப்படாது.
எனினும் SBI ஊழியர்கள் மற்றும் பென்ஷனர்களுக்கு அபராதங்கள் எதுவும் விதிக்கப்படாது. மேலும் அவர்களுக்கு டெபாசிட் உண்மையான கால அளவுக்கு பொருந்தும் வட்டி விகிதம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டி பணத்திற்கு வரி செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள டெபாசிட்களை அடைமானமாக வைத்து கஸ்டமர்கள் கடன் வாங்கலாம்.
பின்வரும் சேனல்கள் மூலமாக முதலீடுகளை செய்யலாம்.
SBI கிளைகள்
YONO SBI மற்றும் YONO Lite போன்ற மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்கள்
SBI இன்டர்நெட் பேங்கிங்
முதலீட்டு தொகை: 1,00,000 ரூபாய்
சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டி: 9787.04
மெச்சூரிட்டி தொகை: 1,09,787.04
பொதுவான சிட்டிசன்களுக்கு வட்டி: 9133.54
மெச்சூரிட்டி தொகை: 1,09,133.54
SBI அம்ரித் விருஷ்டி திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 31, 2025. மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகில் உள்ள SBI கிளை அல்லது SBI பிளாட்ஃபார்ம்கள் மூலமாக டிஜிட்டல் பேங்கிங் ஆப்ஷன்களை பயன்படுத்தவும்.