இந்தியா

Strong winds in Pamban : அலையின் ஆக்ரோஷத்தில் பாம்பன் கடல்… சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…

Published

on

Strong winds in Pamban : அலையின் ஆக்ரோஷத்தில் பாம்பன் கடல்… சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…

பாம்பன் கடல் – ரசிக்க முடியாமல் தடுமாறும் சுற்றுலா பயணிகள்

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு கடலில் பலத்த காற்று வீசி வருவதால் கொந்தளிப்புடன் கடல் சீற்றமாக காணப்படுகிறது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்க விரிகுடாவின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாகியுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வங்கக் கடலில் உள்ள பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை பலத்த காற்றானது வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் பனி மூட்டமாக காட்சி அளித்து கடலில் வீசும் சூறைக்காற்றினால் பாம்பன் வடக்கு கடலானது வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக கொந்தளிப்புடன், ரயில் பாலத்தில் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுப்பி வருகிறது.

Advertisement

இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களில் இருந்து இறங்கி ஆர்வத்துடன் பாம்பன் சாலை பாலத்தில் நின்று பார்த்தும், புகைப்படங்கள் எடுத்தும் வருகின்றனர். இருந்த போதிலும் பாம்பன் பாலத்தில் நிற்க முடியாத அளவுக்கு பலத்த காற்று வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version