இலங்கை

இவ்வாண்டில் நாளொன்றுக்கு 3ஆயிரத்து443 மின் துண்டிப்புகள் பதிவு!

Published

on

இவ்வாண்டில் நாளொன்றுக்கு 3ஆயிரத்து443 மின் துண்டிப்புகள் பதிவு!

2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையில் மின்துண்டிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக மின்சாரப் பாவனையாளர்கள் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தரவுகளின்படி , கடந்த 2023ஆம் ஆண்டில் உரிய நேரத்தில் பணத்தை செலுத்தாமையினால் 9லட்சத்து70ஆயிரத்து933 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சஞ்சீவ தம்மிக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

Advertisement

இவ்வாண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையில் 6லட்சத்து28ஆயிரத்து286 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 5லட்சத்து05ஆயிரத்து949 வீடுகள், 8ஆயிரத்து579 தொழிற்சாலைகள், 2ஆயிரத்து090 வழிபாட்டுத் தலங்கள், 39 ஹோட்டல்கள், 359 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 1லட்சத்து11ஆயிரத்து276 கடைகள் மற்றும் ஏனையவை உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 2ஆயிரத்து660 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டில் நாளொன்றுக்கு 3ஆயிரத்து443 மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.  (ப)
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version