இந்தியா

கிச்சன் கீர்த்தனா : கேரட் சட்னி

Published

on

கிச்சன் கீர்த்தனா : கேரட் சட்னி

பல ஊட்டச்சத்துகள் கொண்ட கேரட் சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் அதிகம் என்றாலும் கேரட்டை ஒதுக்குபவர்கள் நம்மில் பலருண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு இந்தக் கேரட் சட்னி செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இந்தச் சட்னி வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.

கடலைப்பருப்பு – 60 கிராம்
கறுப்பு உளுந்து – 60 கிராம்
காய்ந்த மிளகாய் – 4 – 6
தேங்காய் – அரை மூடி (துருவவும்)
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – கால் இன்ச் துண்டு
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
எண்ணெய் – தேவையான அளவு

Advertisement

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு

கேரட் – 2 (தோல் சீவி நறுக்கவும்)
சின்ன வெங்காயம் – 5 (தோலுரிக்கவும்)
தக்காளி – ஒன்று (நறுக்கவும்)

வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும் முதலில் குறிப்பிட்டுள்ள எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்… அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

Advertisement

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

கேரட், சின்ன வெங்காயம், தக்காளியைச் சேர்த்து சிறிதளவு எண்ணெயில் வதக்கி, இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸ் உடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version