உலகம்

கிரீஸில் படகு கவிழ்ந்து ஐவர் உயிரிழப்பு: பலர் மாயம்!

Published

on

கிரீஸில் படகு கவிழ்ந்து ஐவர் உயிரிழப்பு: பலர் மாயம்!

கிரீஸ் நாட்டின் கவ்டோஸ் தீவுக்கருகில் அகதிகள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 39 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கிறீஸ் கரையோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

காணாமல் போயுள்ளவர்களைத் தேடும் பணிகள் சரக்கு கப்பல்கள் மற்றும் ஹெலிகொப்டர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் இதுவரை மீட்கப்பட்டவர்களில் 29 பெண்கள் அடங்குவர் என்றும் கரையோர காவல் படை அதிகாரியொருவர் சனியன்று குறிப்பிட்டுள்ளார். இந்த படகில் பயணித்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியாததால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் இப்படகில் பயணித்த அகதிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version