இந்தியா
கோயிலுக்குள் திடீரென நுழைந்த 2000 பேர்! ஜோதிடரால் நரசிம்மர் கோயிலில் பரபரப்பு
கோயிலுக்குள் திடீரென நுழைந்த 2000 பேர்! ஜோதிடரால் நரசிம்மர் கோயிலில் பரபரப்பு
நாமக்கல்லில் பிரபலமான நரசிம்மர் தாயார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்வார்கள். இந்த நிலையில், இன்று காலை திடீரென அந்தக் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
திடீரென ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்ததும் அந்த இடம் முழுக்க பரபரப்பாக காணப்பட்டது. அப்படி கோயிலுக்கு வந்த பக்தர்கள் அடுத்து கோயில் வளாகத்தில் அமர்ந்து தியானம் செய்யத் துவங்கிவிட்டனர். அனைவரும் ஒரே நேரத்தில் தியானத்தில் ஈடுபடவே அந்தக் கோயில் முழுக்க மனித தலைகளாக காட்சி அளித்தது.
ஒரே நேரத்தில் 2000க்கும் அதிகமான பக்தர்கள் கூடியது மற்றும் தியானத்தில் ஈடுபட்டதும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தத் தகவலை அடுத்து கோயிலுக்கு விரைந்த அதிகாரிகள் முறையான ஏற்பாடு செய்து அமைதியாக அனைவரும் சாமி தரிசனம் செய்ய வழி செய்தனர்.
#JUSTIN ஜோதிடர் கூறியதைக் கேட்டு நாமக்கல் நரசிம்மர் கோயிலில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் தியானம்#Namakkal #Temple #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/pbfyKaR1wR
இதனையடுத்து அங்கு வந்த பக்தர்களிடம் விசாரித்த போது, இன்று (16ம் தேதி) தமிழ் மாதத்தில் மார்கழி மாதம் 1ம் தேதி. மார்கழி துவங்கும் இந்த நாளில் 6.30 மணி முதல் 30 நாழிகை நாமக்கல் தாயார் சன்னதியில் தியானம் செய்தால் செல்வம் அதிகரிக்கும் என யூடியூப் சேனலில் ஜோதிடர் ஒருவரின் பதிவு வந்தது. மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் வடக்கு நோக்கி உட்கார்ந்து தியானம் செய்தால் செல்வம் கொழிக்கும் என அந்த youtube சேனலில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தது.