உலகம்

ஜோர்ஜியா ஜனாதிபதியாகும் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரர்!

Published

on

ஜோர்ஜியா ஜனாதிபதியாகும் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரர்!

ஜோர்ஜியா நாட்டின் புதிய ஜனாதிபதியாக மென்சஸ்டர் நகரின் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரா் மைக்கேல் கவெலஷ்விலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜோர்ஜியாவில் கடந்த ஒக்டோபரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஆளும் ஜோர்ஜிய கனவுக் கட்சி, கடந்த அக்டோபரில் பெரும்பான்மை இடங்களை வெற்றி பெற்றது.

Advertisement

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் மைக்கேல் கவெலஷ்விலி ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இருந்தாலும், திங்கட்கிழமையுடன் பதவிக் காலம் முடியும் தற்போதைய மேற்குலக ஆதரவு ஜனாதிபதி சலோமி ஸூரபிச்விலி, மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் முறை கொண்டு வரப்படும் வரை தான் தான் சட்டபூர்வ ஜனாதிபதி என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version