இலங்கை

யாழ்ப்பாண அதிகாரசபைக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

Published

on

யாழ்ப்பாண அதிகாரசபைக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் நிலவும் காற்றின் தரம் குறித்து ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், ஆபத்தான காரணிகள் இருப்பின் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, பரிசோதனைகளின் போது யாழ்.மாவட்டத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய அளவில் காற்றின் தரம் காணப்படுமாயின் அது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பொறிமுறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருமதி உமாசுகி நடராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட யாழ்.குடாநாட்டின் பகுதிகளின் காற்றின் தரம் குறித்து பொறுப்பான அரச நிறுவனங்களால் முறையான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவின்மத்ரநாத் தாபரே நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சமர்ப்பிக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த நீதிமன்ற அமர்வு, சம்பந்தப்பட்ட மனுவை விசாரிக்க அனுமதித்து இந்த உத்தரவை பிறப்பித்தது.

Advertisement

இதேவேளை, மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு மார்ச் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version