இந்தியா
Erode East By Election: “விரைவில் இடைத்தேர்தல்” – ஈரோடு கிழக்கு தொகுதி காலி… இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த அப்டேட்…
Erode East By Election: “விரைவில் இடைத்தேர்தல்” – ஈரோடு கிழக்கு தொகுதி காலி… இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த அப்டேட்…
ஈ வி.கே.எஸ் இளங்கோவன்
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணமடைந்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருமகன் ஈ.வே.ரா. கடந்தாண்டு மாரடைப்பு காரணமாக திருமகன் ஈ.வே.ரா மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினராக இந்தியா கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சில சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட இ.வி.கே.எஸ். இளங்கோவன் சில மாத காலங்களாகவே உடல்நலக் குறைவால் அவதியுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தான் கடந்த நவம்பர் மாதம் 27-ஆம் தேதி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். ஆனால், நோயின் தீவிரத் தன்மை காரணமாக கடந்த 14-ஆம் தேதி அவர் காலமானார்.
அவரது மறைவையொட்டி தமிழக அரசானது அரசு மரியாதை உடன் அவரது உடலைத் தகனம் செய்தது. இந்த நிலையில் தான் அவரது மரணத்தைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி ஆனது காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அந்த வகையில் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.