விளையாட்டு

Ind vs Aus | 3ஆவது நாளில் ஆறுதலாக அமைந்த இந்திய பவுலிங்..! 445 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அவுட்

Published

on

Ind vs Aus | 3ஆவது நாளில் ஆறுதலாக அமைந்த இந்திய பவுலிங்..! 445 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அவுட்

Advertisement

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனின் GABBA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாம் நாள் போட்டியில், ஆஸ்திரேலியா 75 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாற, பின்னர் வந்த டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சதமடித்தனர். இதனால் வலுவான நிலைக்கு ஆஸ்திரேலியா சென்றது.

டிராவிஸ் ஹெட் 152 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 405 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்தது.

Advertisement

இதையடுத்து மூன்றாம் நாள் இன்று தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலியாவின் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தங்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தனர். நிலையாக விளையாடிய அலெக்ஸ் கேரியும் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப், நிதீஷ் ரெட்டி தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். இன்னும் சுமார் 3 நாட்கள் இருக்கும் நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்சில் விளையாடவிருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version