இலங்கை

இ.போ.ச. டிப்போக்களில் ஆளணி பற்றாக்குறை ; பல பஸ் சேவைகள் பாதிப்பு

Published

on

இ.போ.ச. டிப்போக்களில் ஆளணி பற்றாக்குறை ; பல பஸ் சேவைகள் பாதிப்பு

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கண்டிப் பிராந்திய டிப்போக்களில் 75 சாரதிகளுக்கும் 36 நடாத்துனர்களுக்கும் வெற்றிடங்கள் காணப்படுவதாக மத்திய பிராந்திய முகாமையாளர் பிரசன்ன தெல்லங்க தெரிவித்தார்.

வெற்றிடங்கள் அவை நிரப்பப்படாத காரணத்தால் பல பகுதிகளுக்குமான 25 பஸ் சேவைகளை இடை நிறுத்தியுள்ளதாக மத்திய பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

Advertisement

கண்டிப் பிராந்தியத்திலுள்ள 7 டிப்போக்களில் மேற்படி வெற்றிடங்கள் உள்ளன. கண்டி தெற்கு, கண்டி வடக்கு, யட்டிநுவர, வத்தேகம, தெல்தெனிய, உடதும்பறை, மாத்தளை ஆகிய ஏழு டிப்போக்களிலே மேற்படி வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இதன் காரணமாக பல பகுதிகளுக்குமான 25 பஸ் சேவைகள் கைவிடப்பட்டுள்ளன.

புதிதாக 47 பஸ் வண்டிகள் கண்டிப்பிராந்தியத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் அவ்வாறான ஒரு பஸ்வண்டிக்கு மாதம் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபா வாடகைக் கொடுப்பனவு (லீசிங்) செலுத்த வேண்டியுள்ளது.

Advertisement

இதற்கு மேற்படி டிப்போக்களில் இருந்தே பணத்தை ஈட்டவேண்டியுள்ளதோடு 25 பஸ் சேவைகளை இடை நிறுத்தியுள்ளமை கிடைக்க வேண்டிய வருமானத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version