இந்தியா

கஞ்சா வழக்கு : சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல்!

Published

on

கஞ்சா வழக்கு : சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல்!

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்றம் காவல் விதித்து மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் போலீசாரை இழிவாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர், உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து ஜாமீனில் வெளியில் வந்தார்.

Advertisement

இதற்கிடையே சவுக்கு சங்கரை கைது செய்யும் போது, தேனியில் அவர் தங்கிய அறையில் கஞ்சா இருந்ததாக கூறி காவல்துறையினர் அதை கைப்பற்றினர்.

இதுதொடர்பாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.

இந்தசூழலில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சவுக்கு சங்கருக்கு மதுரை ம்மாவட்டம் போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

இரண்டு முறைக்கு மேல் நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என தகவல்கள் வருகின்றன.

இந்தசூழலில் சவுக்கு சங்கரை கைது செய்ய நீதிபதி செங்கமல செல்வன் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று சவுக்கு சங்கரை சென்னை தேனாம்பேட்டையில் வைத்து தேனி போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இன்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற பின், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

Advertisement

அப்போது, கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணையின் போது முறையாக ஆஜராகாததால் சவுக்கு சங்கரை டிசம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஜேபிசி-யில் 31 எம்.பி-க்கள்… முழு விவரம்!

Advertisement

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது… ஸ்டாலின் பாராட்டு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version