இந்தியா

தவறான விளம்பரம்… பிரபல நிறுவனத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!

Published

on

தவறான விளம்பரம்… பிரபல நிறுவனத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!

Advertisement

பெண்களையும், ஆண்களையும் அழகுப்படுத்துவதாகக் கூறும் ஃபேர்னஸ் கிரீம் விளம்பரங்களை நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள். சிலர் இந்த க்ரீம்களில் இருந்து பலன் பெறலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் ஃபேர்னஸ் க்ரீம்களில் இருந்து குறிப்பிடத்தக்க பலனைக் பெறமுடியாத நிலையும் ஏற்படும். அந்த வகையில் ஃபேர்னஸ் க்ரீம் தடவி பலன் கிடைக்காத ஒருவருக்கு இதேபோன்ற சம்பவம் நடந்ததால் அவர் நீதிமன்றத்தை அணுகிய சம்பவம் தற்போது நடந்துள்ளது.

அந்த நபர் இமாமி லிமிடெட் நிறுவனத்தின் க்ரீம் பயன்படுத்திய பிறகும் தனது சருமத்தை பளபளப்பாக மாறவில்லை என்று புகார் கூறினார். மேலும் நிறுவனத்தின் ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரம் தவறாகவும், ஏமாற்றுவதாகவும் இருப்பதாக அந்த நபர் குற்றம் சாட்டியிருந்தார். அதன் பிறகு டெல்லியில் உள்ள மாவட்ட நுகர்வோர் மன்றம், அன்ஃபெர் ட்ரேட் ப்ராக்டிசஸ்களுக்காக(unfair trade practices) இமாமி லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்ட்ரல் டெல்லி டிஸ்ட்ரிக்ட் கன்சூமர் டிஸ்ப்யூட்ஸ் ரீட்ரெஸ்சல் கமிஷன் ஆனது இமாமி லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பான ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் க்ரீம் மீதான அன்ஃபெர் ட்ரேட் ப்ராக்டிசஸ் தொடர்பான புகாரை விசாரித்தது. விசாரணையில் புகார் அளித்தவர், 2013 ஆம் ஆண்டு இமாமி லிமிடெட் நிறுவனத்தின் க்ரீமை ரூ.79க்கு வாங்கியதாகவும், ஆனால் அந்த தயாரிப்பு தனது சருமத்திற்கு எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

Advertisement

இதைத்தொடர்ந்து, தயாரிப்பின் பேக்கேஜிங் மற்றும் லேபிளில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி தயாரிப்பு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. பளபளப்பான நிறத்தை பெற முகத்திலும் கழுத்திலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை கிரீம் தடவப்பட்டது. ஆனால் அவரது தோல் அழகாக மாறவில்லை அல்லது வேறு எந்த நன்மையையும் பெறவில்லை என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து இமாமி லிமிடெட் கூற்றுப்படி, க்ரீமை முறையாக பயன்படுத்தியதை புகார்தாரரால் நிரூபிக்க முடியவில்லை என்று இமாமி வாதிட்டது. மேலும், அவரது தோல் நிறம் மாறியதா, இல்லையா என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. பராமரிப்பு என்று வரும்போது கிரீமை பயன்படுத்துவதுடன் உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் போன்ற காரணங்களும் சருமத்தின் பளபளப்பில் பங்கேற்கின்றன என்றும் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நுகர்வோர் மன்றம் கூறியதாவது, இந்த விஷயங்கள் தயாரிப்பின் பேக்கேஜிங்கில் எழுதப்படவில்லை. தயாரிப்பின் பேக்கேஜிங் மற்றும் லேபிளில்களில் இதுபோன்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

கடைசியாக இந்த தயாரிப்பு 16-35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கானது (நோய்வாய்ப்பட்டவர்கள் அல்ல) என்று குறிப்பிட்டிருந்தது. நோய்வாய்ப்பட்ட நபர் என்றால் யாரெல்லாம் அடங்குவர்? இதுவும் விவரங்களும் பேக்கேஜிங்கில் குறிப்பிடப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது. தவறான விளம்பரம் மற்றும் பேக்கேஜிங் மூலம் இமாமி அன்ஃபெர் ட்ரேட் ப்ராக்டிசஸ்களில் ஈடுபட்டதாக ஆணையம் முடிவு செய்தது.

Advertisement

இதனையடுத்து இமாமி லிமிடெட் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டி, டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் ரூ.15 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. எனவே நிறுவனத்தின் அன்ஃபெர் ட்ரேட் ப்ராக்டிசஸ்-ஐ நிறுத்தவும், திரும்பப் பெறவும் அறிவுறுத்தப்பட்டது. அதோடு ரூ14.50 லட்சம் அபராதம் தொகையை டெல்லி மாநில நுகர்வோர் நிதியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், புகார்தாரருக்கு இழப்பீடாக ரூ.50,000 மற்றும் வழக்குச் செலவாக 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version