சினிமா

தீவிரவாதிக்கு வாய்ஸ் கொடுத்தது இவங்களா? டுவிஸ்ட் ரிவீல் செய்த அமரன் இயக்குநர்!

Published

on

தீவிரவாதிக்கு வாய்ஸ் கொடுத்தது இவங்களா? டுவிஸ்ட் ரிவீல் செய்த அமரன் இயக்குநர்!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இறுதியாக வெளியான வெற்றி திரைப்படம் அமரன். இத்திரைப்படத்தில் இடம் பெற்ற ஆசிப் வானி, அல்தாஃப் பாபா கதாபாத்திரங்களுக்கு வாய்ஸ் கொடுத்த நடிகர்களை ரிவீல்  செய்து வீடியோ போட்டுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி. இது தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய்பல்லவி நடிப்பில் மறைந்த முகுந்த் வரதராஜன் பயோபிக்காக உருவாகிய இந்த திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்நிலையில் அமரன் திரைப்படத்தில் தீவிரவாதிகளாக தோன்றிய ஆசிப் வானி, அல்தாஃப் பாபா கதாபாத்திரங்களுக்கு தமிழ் நடிகர்கள் வாய்ஸ் கொடுத்துள்ளனர். இவர்கள் யார் என்பதனை ராஜ்குமார் அவர்கள் டப்பிங் பேசும் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு நன்றிகூறியுள்ளார். அந்த பதிவில் ” எனது கோரிக்கையை ஏற்று ஆசிப் வானி கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்த கௌதம் கார்த்திக்க்கு நன்றி, மேலும் அல்தாஃப் பாபா கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்த என் அன்பு சகோதரன் ஹரிசுத்தமன் அவருக்கும் நன்றி என பதிவிட்டு வீடீயோவை ஷேர் செய்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version