இந்தியா
பாஜக எம்எல்ஏக்கள் 3 பேர் விரைவில் சஸ்பெண்ட்… அரசியலில் திடீர் பரபரப்பு – புதுச்சேரியில் என்ன ஆச்சு!
பாஜக எம்எல்ஏக்கள் 3 பேர் விரைவில் சஸ்பெண்ட்… அரசியலில் திடீர் பரபரப்பு – புதுச்சேரியில் என்ன ஆச்சு!
பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்டு, கல்யாணசுந்தம் ஆகியோர் கட்சி கட்டுப்பாடுகளை மீறி லாட்டரி அதிபர் மார்ட்டினின் அறக்கட்டளைக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து கட்சி தலைமைக்கு தகவல் சென்ற நிலையில், அவசர அழைப்பின் பேரில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி சென்றார்.
அங்கு பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி மற்றும் புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவுடன் அவர் கட்சியின் அமைப்பு செயலாளர் சந்தோஷை நேற்றிரவு சந்தித்தார்.
சந்தோஷிடம் புதுச்சேரி அரசியல் சூழல் குறித்து அவர்கள் விளக்கினர். இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் செல்வத்தை அவசரமாக டெல்லிக்கு வர கட்சி தலைமை அழைப்பு விடுத்தது. ஏனாமில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற செல்வம், அங்கிருந்து விசாகப்பட்டினம் வந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார்.
அங்கு முதலில் சந்தோஷை சந்திக்கும் அவர், பின்னர் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்திக்க உள்ளார். தொடர்ந்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வாலை சந்திக்கும் அவர் தற்போதைய சூழல் குறித்து விளக்குவார் எனக் கூறப்படும் நிலையில், விரைவில் நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.