இந்தியா
லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி அதிகாரி; அதிரடியில் இறங்கிய சிபிஐ
லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி அதிகாரி; அதிரடியில் இறங்கிய சிபிஐ
மதுரையில் லஞ்சப் புகாரில் சிக்கிய மத்திய ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணகுமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய கலால் வரித்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள் இரண்டு பேர் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது, சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த லஞ்ச விவகாரத்தில் மத்திய ஜிஎஸ்டி பொறுப்பு துணை ஆணையர் சரவணகுமாருக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து சரவணகுமாரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே லஞ்சப் புகார் தொடர்பாக சரவணகுமாரின் வீட்டில் சோதனை மேற்கொள்ள தஞ்சாவூர் சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் திருவிடைமருதூரில் உள்ள அவரது வீட்டிற்கு விரைந்து, அங்கு தற்போது சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.