சினிமா

விஜய்-த்ரிஷா சர்ச்சை, பயில்வான் சொன்ன அப்டேட்.. ஓ! இப்படி ஒரு திட்டம் இருக்கா?

Published

on

விஜய்-த்ரிஷா சர்ச்சை, பயில்வான் சொன்ன அப்டேட்.. ஓ! இப்படி ஒரு திட்டம் இருக்கா?

நடிகர் விஜய் லியோ படத்தில் திரிஷாவுடன் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே சர்ச்சையும் அவரை தொற்றிக் கொண்டது. ஏற்கனவே இவர்களுக்குள் விட்ட குறை தொட்ட குறை வதந்திகள் ஏராளம்.

அதை 10 வருடம் கழித்து மீண்டும் தோண்ட ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர்.

Advertisement

அதற்கு ஏற்ற மாதிரி திரிஷா சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக பகிர்ந்த புகைப்படங்கள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாய் அமைந்தது.

போதாத குறைக்கு கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு இருவரும் ஒன்றாக சென்று வந்தது காட்டு தீயாய் எரிந்து கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லா சினிமா விமர்சனங்களும் இந்த விஷயத்தை போதுமான அளவுக்கு அலசி விட்டார்கள். பையில்வான் ரங்கநாதன் மட்டும் சும்மா இருப்பாரா.

Advertisement

அவருடைய பங்குக்கு கருத்து ஒன்றை அள்ளித் தெளித்திருக்கிறார். அதாவது விஜயின் மனைவி லண்டனில் அவருடைய அப்பா வீட்டில் பிள்ளைகளுடன் வசித்து வருகிறாராம்.

அதே நேரத்தில் விஜய் இங்கே நீலாங்கரை வீட்டில் தனியாகத்தான் இருக்கிறாராம். அரசியலுக்கு வரும் நேரத்தில் இது போன்ற வதந்திகள் வெளியாவதை விஜய் விரும்ப மாட்டார்.

அப்படி இருக்கும்போது இப்படி புகைப்படங்கள் எல்லாம் வெளியாகும் அளவுக்கு எப்படி கவன குறைவாக இருப்பார்கள்.

Advertisement

ஒருவேளை இது எல்லாம் பொது வெளியில் தெரியட்டும் என இருவருமே நினைக்கிறார்களோ என்னவோ. இருந்தாலும் விஜய் திரிஷாவை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version