இந்தியா

Chennai Rains: சென்னை மக்களே.. இன்று மழையின் தாக்கம் எப்படி? – ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை மையம்!

Published

on

Chennai Rains: சென்னை மக்களே.. இன்று மழையின் தாக்கம் எப்படி? – ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை மையம்!

Advertisement

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், இரவு நேரத்தில் லேசான மழை பெய்தது. புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.

இந்த சூழலில், வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளைக்குள் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட இந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் லேசாக மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 10 மணிக்கு பிறகு கனமழையாகவும், படிப்படியாக அதிகரித்து மிக கனமழையாக அதிகரிக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

நாளை மறுநாள் (டிச.20) வரை மழையின் தாக்கம் இருக்கும் என்றும், நாளை மறுநாள் சென்னையின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version