இந்தியா

Christmas Celebration: கிறிஸ்துமஸ் குடிலில் இடம்பெறும் பொம்மைகள்… பின்னணி என்ன தெரியுமா…

Published

on

Christmas Celebration: கிறிஸ்துமஸ் குடிலில் இடம்பெறும் பொம்மைகள்… பின்னணி என்ன தெரியுமா…

Christmas Celebration: கிறிஸ்துமஸ் குடிலில் இடம்பெறும் பொம்மைகள்.. பின்னணி என்ன தெரியுமா..

Advertisement

வணிக வளாகங்கள், தேவாலயங்கள், வீடுகள் என இடத்திற்கேற்ப இந்த குடில்கள் பிரம்மாண்டமாகவும், கண்ணைக் கவரும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தாலும் இவற்றில் எல்லாம் பொதுவாக இருப்பது குடில்களில் இடம்பெறும் பொம்மைகள். அந்த பொம்மைகள் எதற்கு வைக்கப்படுகிறது? அவற்றுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன என தெரியுமா?

இயேசு பெத்தலகேமில் உள்ள தொழுவத்தில் பிறந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இந்த குடில்கள் அமைக்கப்படுகின்றன. இயேசு கருவில் இருப்பதை மரியாளுக்கும், அவரது கணவர் யோசேப்புக்கும் தேவதூதர் தெரிவித்த பின்னர் பெத்லகேம் வந்த இடத்தில் தங்குவதற்கு விடுதி தேடி மரியாளும், யோசேப்பும் அலையும் போது, அங்குள்ள தொழுவத்தில் இயேசு பிறக்கிறார்.

Advertisement

இதை முதலாவதாக அங்கு வரும் ஆடு மேய்ப்பவர் காண்கிறார். இயேசு பிறப்பை கடவுள் பிறக்கும் நாளில் வானில் நட்சத்திரம் தோன்றும் என தேவதூதர் அங்குள்ள மூன்று ராஜாக்களுக்கு கூற, அவர்களும் ஒட்டகத்தில் அங்கு வந்து சேருகின்றனர். இதை குறிக்கும் விதமாகத் தான் குடிலில் குழந்தை ஏசு, தேவதூதர், மரியாள், யோசேப்பு, மூன்று ராஜாக்கள், ஆடு மேய்ப்பவர் மற்றும் கழுதை, மாடு, ஆடு, ஒட்டகம் போன்ற பொம்மைகள் வைக்கப்படுகிறது.

தொழுவத்தைக் குறிக்கும் வகையில் வைக்கோலைப் பரப்பி விட்டு அதில் இந்த பொம்மைகளை வைத்து குடில் அமைப்பார்கள். இந்தியா உள்ளிட்ட கிறிஸ்துமஸ் கொண்டாடும் உலக நாடுகள் அனைத்திலும் இந்த குடில்கள் அமைக்கும் பழக்கம் காணப்படுகிறது.

Advertisement

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version