வணிகம்

NACH மூலமாக மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனை தோல்வியுறுவது ஏன்?

Published

on

NACH மூலமாக மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனை தோல்வியுறுவது ஏன்?

நேஷனல் ஆட்டோமேட்டட் க்ளியரிங் ஹவுஸ் (NACH) அமைப்பு என்பது இந்தியாவில் பிரபலமான தானியங்கி பணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் EMIகள், பயன்பாட்டு கட்டணம் மற்றும் சந்தா போன்றவை செலுத்தப்படுகின்றன. சில நேரங்களில் இதன் மூலம் கட்டணம் செலுத்தும் போது, அதன் பயன்பாடுகள் தோல்வி அடைகின்றன. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.நிதி பற்றாக்குறை: வங்கி கணக்கில் போதுமான நிதி இல்லாத காரணத்தினால் இந்த பண பரிவர்த்தனை தோல்வி அடையும்.தொழில்நுட்பக் குறைபாடுகள்: சில சமயங்களில், வங்கிகளில் இருந்து தொழில்நுட்ப குறபாடுகள் ஏற்படும் போது, பரிவர்த்தனை நிராகரிக்கப்படலாம்.தானியங்கி முறை காலாவதி ஆகும் நிலை: வங்கி கணக்கில் இருந்து தானியங்கி முறையில் பணம் எடுக்கும் ஆணை, காலாவதியானால், செலுத்தப்படும் கட்டணம் நிராகாரிக்கப்படும்.வங்கி கணக்கில் ஏற்படும் பிரச்சனை: வங்கி கணக்குகள் முடக்கப்பட்டாலோ அல்லது செயலிழந்திருந்தாலோ பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.NACH பரிவர்த்தனை தோல்வியுற்றால் ஏற்படும் விளைவுகள்:அபராதம் விதிப்பு: சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படமால் தவறும் பட்சத்தில், அபராதம் விதிக்கப்படும்.கிரெடிட் ஸ்கோரில் தாக்கம்: இவ்வாறு அடிக்கடி நடக்கும்பட்சத்தில் ஒருவரது கிரெடிட் ஸ்கோர் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.சேவையில் இடையூறு: இதற்கான கட்டணம் செலுத்தப்படும் வரை, சந்தா சேவைகள் நிறுத்தப்படலாம்.எனவே, பணப்பரிமாற்றம் தோல்வியுற்றதற்கான காரணம் என்னவென்று அறிந்து, அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். வங்கி கணக்கில் போதுமான கட்டணம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் இருந்தால், வங்கியை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version