இந்தியா

PWD Vacancy: பொதுப்பணித்துறையில் 760 அப்ரண்டிஸ் காலியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…

Published

on

PWD Vacancy: பொதுப்பணித்துறையில் 760 அப்ரண்டிஸ் காலியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…

PWD Vacancy: பொதுப்பணித்துறையில் 760 அப்ரண்டிஸ் காலியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…

Advertisement

இந்த தமிழ்நாடு பொதுப்பணித்துறை அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் அல்லது பதிவுக் கட்டணம் எதுவும் தேவையில்லை. தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பச் செயல்முறை முற்றிலும் இலவசமாகும்‌.

பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல்) 500 காலிப்பணியிடங்களும், டெக்னீஷியன் அப்ரண்டிஸ் 160 காலிப்பணியிடங்களும், பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல் அல்லாத) 100 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன.

Advertisement

பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல்) பணிக்கு சிவில்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அல்லது பி.ஆர்க் பிரிவில் BE/B.Tech முடித்திருக்க வேண்டும், டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பணிக்கு கட்டிடக்கலை அல்லது சிவில்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல் அல்லாத) BA அல்லது B.Sc அல்லது B.Com அல்லது BBA அல்லது BCA அல்லது BBA அல்லது ஏதேனும் பொறியியல் அல்லாத பட்டம் முடித்திருக்க வேண்டும்.

Advertisement

பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல்) மாதம் ரூ.9,000, டெக்னீஷியன் அப்ரண்டிஸ் மாதம் ரூ.8,000, பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல் அல்லாத) மாதம் ரூ.9,000 வழங்கப்படுகிறது.

18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Advertisement

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் நவம்பர் 25, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரை TN PWD அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பச் செயல்முறை முற்றிலும் ஆன்லைனில் உள்ளது. மேலும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version