இந்தியா

“அயோத்தியில் அம்பேத்கர் தான் வென்றார்..” – அமித்ஷா பேச்சுக்கு சீமான் பதில்

Published

on

“அயோத்தியில் அம்பேத்கர் தான் வென்றார்..” – அமித்ஷா பேச்சுக்கு சீமான் பதில்

“மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கு உதவுவதை சடங்கு என விஜய் கூறுவது தவறு. அது கடமை; அது சமூக பொறுப்பு” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

Advertisement

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசி உள்ளார். உயிருடன் இருப்பவர்களுக்கு சாப்பாடு போடாத கடவுள் இறந்த பின் சொர்க்கம் தருவார் என்றால் அதை எப்படி நம்புவது?

அயோத்தியில் கடவுள் பெயரை கூறி தான் போட்டியிட்டீர்கள். ஆனால் அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் அங்கு வெற்றி பெற்றார். தமிழகத்திற்கு வெள்ள பாதிப்பிற்கான நிவாரணம் கேட்டால் அது குறித்து மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.

இஸ்லாமியர்களை எதிர்த்து பேசுவதை தவிர ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.விற்கு வேறு கொள்கை இல்லை. மக்களுக்கான திட்டங்களை பா.ஜ.க அரசு எதுவும் செய்வதில்லை. அவர்கள் கோவிலை விட்டு வெளியே வந்து குடிசைகளை பார்ப்பதில்லை” என்று தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து, வெள்ளப் பாதிப்பை நேரில் சென்று பார்வையிடுவது குறித்து நடிகர் விஜய் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், “மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கு உதவுவதை சடங்கு என விஜய் கூறுவது தவறு. அது கடமை, அது சமூக பொறுப்பு தான்.

ஒரே நாடு ஒரே தேர்தலை ஏற்பது போல் ஒரு துரோகம் இருக்காது. பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது தான்.

தமிழ்நாடு அரசு நியமித்த துணைவேந்தர்கள் தேடுதல் குழுவை ரத்து செய்ய வேண்டும் என ஆளுநர் கூறுவது தவறானது. தமிழ்நாடு அரசிடமிருந்து, அதிகாரத்தை ஆளுநர் எடுத்துக்கொள்ள நினைக்கிறார்.

Advertisement

இது மக்களாட்சி; எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என ஆளுநர் கூறக்கூடாது. ஒரு நியமன உறுப்பினருக்கு அதிகாரம் கூடாது.

மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவோம் என இலங்கை அதிபர் கூறுகிறார். கச்சத்தீவு என்பது தமிழர்களின் உரிமை. தமிழக மீனவர்களாக இருந்தால்தான் இலங்கை அரசு அவர்களை கைது செய்கிறது.

#JUSTIN
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது சடங்கா-
தவெக தலைவர் விஜய்க்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி#TVKVijay #NTK #Seeman #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/EF4PT0SRsc

Advertisement

கேரள மீனவர்களையோ, குஜராத் மீனவர்களையோ கைது செய்வதில்லை. அப்படி கைது செய்யப்பட்டாலும் உடனடி நடவடிக்கைகளில் அரசு அவர்களை மீட்கிறது. ஆனால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. திருச்சி எஸ் பி வருண்குமாருக்கும் தனக்கும் இடையேயான பிரச்சனை இன்னும் முற்றும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version