இலங்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜாவே நீடிப்பு!

Published

on

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜாவே நீடிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜாவே நீடிக்கின்றார் என்று பிரகடனம் ஒன்றை உத்தரவாக வழங்கக்கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு பதில் நீதவான் எஸ்.கணதீபன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா நீடிக்க முடியுமா என்பது தொடர்பாக எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், நேற்றுமுன்தினம் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று எடுக்கப்பட்டபோது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீதிமன்றங்களுக்கு வருட இறுதி விடுமுறை விடப்படுவதால் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.  (ப)
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version