இந்தியா
“ஒரே நாடு – ஒரே தேர்தல்” – பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா… அடுத்த கட்டம் என்ன?
“ஒரே நாடு – ஒரே தேர்தல்” – பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா… அடுத்த கட்டம் என்ன?
ஒரே நாடு – ஒரே தேர்தல் மசோதா – பாராளுமன்றத்தில் தாக்கல்
இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது என்பது வழக்கமான ஒன்று. சட்டப்பேரவை, நாடாளுமன்றம் என ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவிகள் காலியாகும் பொழுது தேர்தல் நடைபெறும். ஒவ்வொரு மாநிலத்தின் பதவி காலமும் வெவ்வேறு காலகட்டங்களின் முடிவதால் இதனால் தேர்தலை நடத்த அதிக செலவுகளும், நலத்திட்டங்களை முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக மத்தியில் ஆளும் பாஜக அரசு தெரிவித்துள்ளது.
இதனால் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை பாஜக அரசு கொண்டுவர முனைப்பு காட்டி வருகிறது. மத்திய அமைச்சரவை தான் ஒப்புதல் செய்யப்பட்ட இந்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. என்னென்ன சாதனைகள் என்று அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை
* ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதால் தேர்தல் செலவினங்கள் குறையும் என்றும், வாக்குச் பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
* நாட்டில் 1951-52 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே மாதிரியாகத்தான் தேர்தல் நடைபெற்று வந்தது.
“ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பாக பல்வேறு சாதக பாதக அம்சங்கள் கூறப்படாலும், இதை அமல்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன.
* ஒரே நாடு ஒரே சட்டத்தை அமல்படுத்த அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம்.
* நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இருந்தால்தான் இதை நிறைவேற்ற முடியும்.
* அது மட்டும் இன்றி நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் இதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஒருவேளை இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால் வரும் 2029 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.