இலங்கை

கலகொட அத்தே ஞானசார தேரர்ருக்கு பிடியாணை!

Published

on

கலகொட அத்தே ஞானசார தேரர்ருக்கு பிடியாணை!

கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகாததால் அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட ஞானசார தேரருக்கான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சுகயீனம் காரணமாக ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Advertisement

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேன, வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  (ப)
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version