இந்தியா

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: சுயேச்சை எம்.எல்.ஏ கடிதம்; புதுச்சேரியில் பரபரப்பு

Published

on

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: சுயேச்சை எம்.எல்.ஏ கடிதம்; புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி சபாநாயகர் செல்வம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் தயாளனிடம் உருளையன்பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ நேரு கடிதம் கொடுத்தார்.இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நேரு எம்.எல்.ஏ, “சட்ட விதிமுறைகள் மீறி சபாநாயகர் செல்வம் தொடர்ந்து செயல்படுகிறார். அனைத்து அரசு விழாக்களிலும் தன்னை அழைக்க வேண்டும் என அதிகாரிகளை மிரட்டி பங்கேற்பது, சபாநாயகர் பதவியை அவமதிக்கும் செயல்.சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை என தொடர்ந்து எதிர்க் கட்சிகள் புகார் கூறி வரும் நிலையில்,இந்த வாய்ப்பினை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சபாநாயகர் மீது அதிருப்தியில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இதனை பயன்படுத்தி அவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version