இந்தியா

நெல்லை மக்களுக்கு அச்சுறுத்தலான கேரளா மருத்துவக் கழிவு; தமிழ்நாட்டில் இரு முக்கிய நபர்கள் கைது

Published

on

நெல்லை மக்களுக்கு அச்சுறுத்தலான கேரளா மருத்துவக் கழிவு; தமிழ்நாட்டில் இரு முக்கிய நபர்கள் கைது

கேரளா மாவட்டத்தில் இருந்து இறைச்சிக் கழிவுகளும், மருத்துவக் கழிவுகளும் தமிழ்நாட்டின் கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

Advertisement

தற்போது நெல்லை மாவட்டம், நாடுக்கல்லூர், பழுவூர், கொண்டாநகரம் உள்ளிட்ட ஊராட்சிகளின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கேரளாவில் இருந்து 200 லாரி மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்ட கழிவுகளை மூன்று நாளில் கேரளாவே அகற்ற வேண்டும் என்றும், அப்படியில்லை என்றால், கழிவுகளை மேலாண்மை செய்யும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மாநில மருத்துவக் கழிவுகளை நெல்லை மாவட்டத்தில் கொட்டிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து நெல்லையில் கழிவுகளைக் கொட்டுவதற்காக முகவர்களாக செயல்பட்ட நெல்லை மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகர் மற்றும் மாயாண்டி ஆகிய இருவரும் நெல்லை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மனோகர் மற்றும் மாயாண்டி ஆகிய இருவரிடமும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version