சினிமா

மண்ணே இல்லாமல் வளரும் காய்கறி… நடிகை சமந்தா செய்த காரியம்!

Published

on

மண்ணே இல்லாமல் வளரும் காய்கறி… நடிகை சமந்தா செய்த காரியம்!

நடிகை சமந்தா உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். ஹெல்த்தியான உணவு வகைகள் குறித்து அவ்வப்போது பதிவுகளை வெளியிடுவார்.

அந்த வகையில், ஹைதராபாத்தை சேர்ந்த அர்பன் கிஸான் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் சமந்தாவை கவர்ந்து இழுத்ததோடு, அவரிடத்தில் இருந்து இன்வெஸ்ட்மென்டையும் பெற்றுள்ளது.

Advertisement

இந்த நிறுவனம் மண்ணே இல்லாமல் காய்கறிகளை அறுவை செய்யும் நவீன தொழில்நுட்பத்தில் காய்கறிகளை விளைவிக்கிறது.

நீர் வழி அல்லது காற்றின் ஈரப்பத வழிமுறையில் உணவு பொருட்களை விளைய வைப்பதே மண்ணில்லா சாகுபடி முறை. இதன் மூலம் பயிர்களின் நீர்த்தேவையை 70 சதவீதம் வரை குறைப்பதோடு நிலம் மற்றும் மண் தேவையும் குறைகிறது.

பல்லடுக்கு அல்லது செங்குத்து பண்ணை முறையிலான விவசாயம் இது. இந்த தொழில்நுட்பத்தில் காய்கறி உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்க முடியும். சமதளத்தில் பயிரிடும் போது பயிர்களுக்கு குறைவான சூரியஒளியே கிடைக்கும். செங்குத்து முறையில் அதிக சூரியஒளி கிடைப்பதால் அதிகளவில் விளைவிக்கலாம்.

Advertisement

பாலைவனம், மலையோர நகரங்கள், பெருநகரங்களில் பலவகைப்பட்ட காய்கறிகளை விளைவிக்க செங்குத்து பண்ணை முறை உதவுகிறது.

ஹைட்ரோபோனிக் விவசாய முறை என்று இதை அழைப்பார்கள். இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களில் நச்சுத்தன்மை அறவே இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. உடல் நலனில் மிகுந்த அக்கறை காட்டுபவர்கள் இந்த முறையிலான காய்கறி , பழங்களை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

அர்பன் கிஸான் நிறுவனத்தை வேளாண் ஆராய்ச்சியாளர் சாய்ராம், அக்கவுண்டன்டான விஹாரி ஆகியோர் இணைந்து தொடங்கியுள்ளனர். 50 வகையான காய்கறி, பழங்கள், மலர்களை இந்த நிறுவனம் பயிரிடுகிறது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் இப்போது அமெரிக்காவிலும் கால் பதித்துள்ளது.

Advertisement

இந்த நிறுவனத்தில் நடிகை சமந்தாவும் இன்வெஸ்ட் செய்துள்ளார். இது குறித்து, நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான விஹாரி கூறுகையில், “சமந்தா ஹெல்த்தியான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார். மக்களும் ஹெல்த்தியான உணவுகளை சாப்பிட வேண்டுமென்று விரும்புவார்.

இதனால், நாங்கள் 2020-ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்கியதில் இருந்தே ஆர்வம் காட்டி வந்தார். எங்கள் நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார். எங்கள் நிறுவனத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நேரமிருந்தால் தவறாமல் வந்து பங்கேற்பார்” என்று தெரிவித்துள்ளார்.

17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள்!
பாஷா இறுதி ஊர்வலம்… பாஜக நடத்தும் பதிலடி ஊர்வலம்: கோவையில் பதற்றம்!

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version