இலங்கை

மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயது 63 வயது வரை நீட்டிப்பு!

Published

on

மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயது 63 வயது வரை நீட்டிப்பு!

அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 வயது வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறப்பு மருத்துவ அலுவலர்கள், தர மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் மருத்துவ அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை அலுவலர்கள் மற்றும் நிர்வாக மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து அரசு பதிவு மருத்துவ அலுவலர்களின் ஓய்வு வயது 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

முன்னதாக, மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக இருந்தது, பின்னர் அது 60 ஆக குறைக்கப்பட்டமை இதன்போது குறிப்பிடத்தக்கது.  (ப)
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version