இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவுகள் தொடர்பில் ரணில் அதிரடி!

Published

on

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவுகள் தொடர்பில் ரணில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவுகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

Advertisement

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புச் செலவுக்காக கடந்த பதினொரு மாதங்களில் 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக வெளியான அறிக்கைகள் உண்மையற்றவை.

முன்னாள் ஜனாதிபதிக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருளுக்காக மட்டுமே கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களாக இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளின் சம்பளத்துக்காக அதிக தொகை செலவிடப்படுகிறது.

Advertisement

மேலும் கடந்த பதினொரு மாதங்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புச் செலவுகளுக்காக 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்துடன் கணக்கீடு தவறானது எனவும் கணக்கிடப்பட்டுள்ளதுடன் 

அறிவிக்கப்பட்ட இழப்பீடுகள் சரியானவை அல்ல எனவும்  அவ் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version