இலங்கை
வடக்கு மாகாணத்துக்கு இரண்டு புதிய செயலாளர்கள் நியமனம்!
வடக்கு மாகாணத்துக்கு இரண்டு புதிய செயலாளர்கள் நியமனம்!
வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நேற்று மாலை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பொ.குகநாதனுக்கும், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலராக திருமதி ப.ஜெயராணிக்கும், வடக்கு மாகாண ஆளுநரால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.