இந்தியா

2 நாட்கள் பயணமாக ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

Published

on

2 நாட்கள் பயணமாக ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் இரண்டாவது கோடி பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டாவது கோடி பயனாளியான நஞ்சனாபுரத்தை சேர்ந்த சுந்தரம்பாளுக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பயனாளியான வசந்தா என்பவரை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பீளமேடு விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Also Read :
அயோத்தியில் அம்பேத்கர் தான் வென்றார்.. – அமித்ஷா பேச்சுக்கு சீமான் பதில்

Advertisement

தொடர்ந்து காரில் சாலை மார்க்கமாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சாலையின் இரு புறமும் திரண்டு மக்கள் வரவேற்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version