இலங்கை
5 லட்சம் பெறுமதியான நகைத்திருட்டு இருவர் கைது!
5 லட்சம் பெறுமதியான நகைத்திருட்டு இருவர் கைது!
மூதாட்டி தனித்திருந்த வீட்டுக்குள் அதிகாலையில் புகுந்து 5 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை கிளிநொச்சி, திருநகர் பகுதியில் நடந்துள்ளது. பொலிஸாரின் அவசர அழைப்புப் பிரிவுக்கு அதிகாலை 4 மணியளவில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து கிளிநொச்சிப் பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் உடனடி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி விஜயராஜ் தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் குழு, அதேஇடத்தைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளது.
25 மற்றும் 26 வயதுடைய சந்தேகநபர்களிடம் இருந்து ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் கொள்ளையிடப்பட்டுள்ள நகைகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். (ப)