இந்தியா

Job Fair 2024: வேலை தேடும் இளைஞர்களே!! உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு… இத மிஸ் பண்ணிடாதீங்க…

Published

on

Job Fair 2024: வேலை தேடும் இளைஞர்களே!! உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு… இத மிஸ் பண்ணிடாதீங்க…

வேலைவாய்ப்பு முகாம் 

Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (டிசம்பர்.20) நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்கக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்குத் தொடர்ந்து சிறிய மற்றும் மாபெரும் அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு, தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 20.12.2024 (வெள்ளிக்கிழமை) அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது.

Advertisement

இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலைநாடும் இளைஞர்கள், தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையமான www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகப் பதிவு செய்தும் பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version