இந்தியா

TVK Vijay: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டி? – நிர்வாகிகளுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்!

Published

on

TVK Vijay: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டி? – நிர்வாகிகளுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்!

Advertisement

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே கட்சியை ஆரம்பித்த விஜய், இடைத்தேர்தலில் களம் காண்பாரா என எதிர்பார்ப்பு இருந்தது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய விஜய், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தான் தங்களின் இலக்கு என்றும், இடைத்தேர்தல் குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கட்சிக்குள் எந்த சலசலப்புக்கும் இடம் கொடுக்காமல், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என நிர்வாகிகளை விஜய் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

அடுத்தாண்டு முழுவதையும், சுற்றுப்பயணம், பூத் கமிட்டி என கட்சியை பலப்படுத்த, தவெக பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது. வரும் பிப்ரவரி மாதம் தவெகவின் 2ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாட விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version