பொழுதுபோக்கு

இந்த வாரமும் டபுள் தானாம்: ஹாட்ரிக் அடிக்கும் பிக்பாஸ்; வெளியேறப்போவது யார்?

Published

on

இந்த வாரமும் டபுள் தானாம்: ஹாட்ரிக் அடிக்கும் பிக்பாஸ்; வெளியேறப்போவது யார்?

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த இரு வாரங்களை போலவே இந்த வாரமும் 2 எலிமினேஷன் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 7 சீசன்கள் முடித்துள்ள நிலையில், 8-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. சின்னத்திரை, சமூகவலைதளம் ஆகியவற்றில் முன்னணி பிரபலங்களாக இருக்கும் பலர் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியை, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.கமல்ஹாசன் அளவுக்கு இல்லை என்றாலும், விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைல் பலரையும் கவர்ந்துள்ளது. அதே சமயம், இவரே போட்டியாளர்களை ட்ரோல் செய்கிறார் என்ற விமர்சனமும் இருந்து வரும் நிலையில், ஒவ்வொரு வார இறுதியில் விஜய் சேதுபதி வரும் எபிசோடுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்த தவறியதில்லை. அந்த வகையில் கடந்த 2 வாரங்களாக 2 எலிமினேஷன்கள் நடந்துள்ளது.கடந்த இரு வாரத்திற்கு முன்பு, ஆர்.ஜே.ஆனந்தி மற்றும் சாச்சனா வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் தர்ஷிகா, மற்றும் சத்யா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதில் சனிக்கிழமை சத்யாவும், அடுத்த நாள் தர்ஷிகாவும் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது அல்லது ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களின் கணிப்பை பொய்யாக்கும் வகையில் இந்த வாரமும் 2 எலிமினேஷன் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே எந்த டாஸ்க்கிலும் பங்கேற்காமல் இருக்கும் நடிகர் ரஞ்சித்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதன்பிறகு அன்ஷிதாவை வெளியேற்றவும் ரசிகர்கள் கூறி வரும் நிலையில், இந்த வாரம் அன்ஷிதா ரயானை தாக்கியதால், அவருக்கு ரெட்கார்டு கொடுக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். இதன் மூலம் இந்த வாரமமும் 2 பேர் வெளியேற்றப்பட்டால் ஹாட்ரிக் டபுள் எலிமினேஷன் என்று கூறி வருகின்றனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் விஜய் சேதுபதி விஜய் சேதுபதி வரும்போது நிறைய பஞ்சாயத்துகளுக்கு தீர்வு காணவேண்டிய கட்டாயம் உள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version