பொழுதுபோக்கு

கதைநாயகனாகவே பயணிப்பேன் – திருச்சியில் நடிகர் சூரி பேட்டி

Published

on

கதைநாயகனாகவே பயணிப்பேன் – திருச்சியில் நடிகர் சூரி பேட்டி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சோனா மீனா திரையரங்கிற்கு வந்த நடிகர் சூரியை, ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது நடிகர் சூரி தெரிவித்ததாவது; விடுதலை 2 படம் கமர்சியலை தாண்டி, மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இந்த படத்தில் இருக்கிறது. விடுதலை 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும். சினிமா ரசிகர்கள் அனைவரும் விடுதலை -2 படத்தை பாருங்கள். இந்த படத்துக்கு மக்கள் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, விடுதலை-3 எடுப்பது குறித்து பார்ப்போம்.அடுத்தடுத்த படங்களில் கதை நாயகனாகவே பயணிப்பேன். விடுதலை-2ல் வாத்தியார் யார் என்பது குறித்து விரிவாக இருக்கும். நானும் படத்தில் இருப்பேன். விடுதலை 2 படம் அனைவரின் வாழ்வோடு ஒன்றிணையக் கூடியதாக இருக்கும். படம் பார்த்துவிட்டு வெளிவருபவர்களுக்கு நிச்சயம் இது ஒரு வலி மிகுந்த உணர்வைத் தரும்.நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணைந்து நடிப்பேன். அதை சிவகார்த்திகேயன் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கு எப்பொழுதும் ஹீரோ என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் தான் என்று கூறினார்.இதற்கிடையே, சூரியை கண்டு ரசிகர்கள் சிலர் ‘அடுத்த தளபதி ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ என கத்தினார். இதைக்கேட்டு சூரி கலகலப்பாக, “எப்பா ஏய்… அமைதியா இருங்கய்யா… உங்கள்ல ஒருத்தரா இருக்கறதே நல்லது. அதுவே போதும்” என்றார் புன்னகையுடன்.தொடர்ந்து அவரிடம் ரசிகர்கள், ‘அரசியலுக்கு வருவீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு, “இதுவே (திரைத்துறையே) நன்றாகதான் இருக்கிறது. இதிலேயே பயணிப்போம்” என்று கூறினார்.க.சண்முகவடிவேல்“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version