உலகம்

சுனிதா வில்லியம்ஸை மீட்பதில் தொடரும் சிக்கல்!

Published

on

சுனிதா வில்லியம்ஸை மீட்பதில் தொடரும் சிக்கல்!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் பயணம் மேலும்  தாமதமாகும் என நாசா தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் 5ஆம் திகதி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர்.

Advertisement

ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளனர்.

இவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்கு நாசா பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்தநிலையில், 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வர முடியும் என நாசா முன்னதாக அறிவித்திருந்தது.

Advertisement

ஆனால் அவர்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதில் தொடர்ந்தும் சிக்கல்   ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, 2025 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version