இந்தியா

சென்னை ஐஐடி-க்குள் பொதுமக்களுக்கு அழைப்பு: என்ன விசேஷம்?

Published

on

சென்னை ஐஐடி-க்குள் பொதுமக்களுக்கு அழைப்பு: என்ன விசேஷம்?

ஜனவரி 3, 4-ம் தேதிகளில் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையங்களையும் ஆய்வகங்களையும் பார்வையிடலாம் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘அனைவருக்கும் சென்னை ஐஐடி’ என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வோர் ஆண்டும் ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் ஐஐடி நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும், அங்குள்ள தொழில்நுட்ப ஆய்வகங்களையும் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட முடியும். அந்த வகையில் 2025-ம் ஆண்டு ஜனவரி 3 மற்றும் 4-ம் தேதி ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Advertisement

ஐஐடியில் இயங்கி வரும் 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றோடு ஆராய்ச்சி திட்டப்பணிகளை எடுத்துரைக்கும் 60-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அரங்குகளையும் பொதுமக்கள் பார்க்கலாம். இந்தச் சிறப்பு திட்டத்தின்கீழ் ஐஐடியை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் டிசம்பர் 25-ம் தேதிக்குள் shaastra.org/open-house என்ற இணையதள இணைப்பில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version