இந்தியா
பாட்டிக்கு பார்ட்டி வைத்த 78 பேரன், பேத்திகள்.. நிஜமான ‘எம்டன் மகன்’ சம்பவம்!
பாட்டிக்கு பார்ட்டி வைத்த 78 பேரன், பேத்திகள்.. நிஜமான ‘எம்டன் மகன்’ சம்பவம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் நாகம்மாள். 96 வயதான இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். உயிரிழந்த மூதாட்டிக்கு 78 பேரன் பேத்திகள் உள்ளனர். இதற்கிடையே, தனது இறப்பிற்குப் பின் தனது இறுதிச்சடங்கு நிகழ்வை சோகத்தோடு இல்லாது, ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் சந்தோசமாக நடத்த வேண்டும் என மூதாட்டி ஏற்கெனவே கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி அவரது ஆசையை நிறைவேற்றும் வண்ணம், உயிரிழந்த பாட்டிக்காக 78 பேரன் பேத்திகளும் இணைந்து ஆடல் பாடல், கும்மியாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இறுதி மரியாதை செலுத்தினர்.
பெரும்பாலும் கோயில் திருவிழா போன்றவற்றில் மட்டுமே ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் சூழலில் இறுதிச்சடங்கில் ஆடல் பாடல் நடந்தது கவனம் பெற்றுள்ளது. இதனால், இறப்பு நிகழ்வானது சின்னப்பாலார்பட்டியில் திருவிழா போல் கொண்டாடப்பட்டது.