இந்தியா

புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு… பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு

Published

on

புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு… பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி செயல்பட்டு வருகிறார். புதுச்சேரி அரசு சார்பில் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து கழகம் சார்பில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, யானம் உள்ளிட்ட பகுதிகளிலும், தமிழ்நாட்டுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் ஒப்புதலின்பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் அதிகபட்சமாக 8 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதுஏசி வசதியில்லாத நகரப் பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்சமாக 13 ரூபாயில் இருந்து 17 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.ஏசி வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்சம் 10 ரூபாயில் இருந்து 13 ரூபாயாகவும், அதிகபட்சமாக 26 ரூபாயில் இருந்து 34 ரூபாயாகவும் அதிகரிப்பட்டுள்ளது.புதுச்சேரியிரிலிருந்து கடலூருக்கான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும், விழுப்புரத்திற்கு 25 ரூபாயில் இருந்து 30 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version