இந்தியா

₹.5 ஆயிரம் பரிசுத் தொகை வெல்ல சூப்பர் வாய்ப்பு… நாளையே கடைசி நாள்… முந்துங்கள்

Published

on

₹.5 ஆயிரம் பரிசுத் தொகை வெல்ல சூப்பர் வாய்ப்பு… நாளையே கடைசி நாள்… முந்துங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பேச்சுப் போட்டி 

Advertisement

கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் 133 அடி உயர உருவச்சிலை 01.01.2000 அன்று முத்தமிழறிஞர் கலைஞரால் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்று வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, திருக்குறள் தொடர்பான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா ஆகிய போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நடத்தப்படவுள்ளன.

வரும் 24.12.2024 காலை 10.30 மணிக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், 26.12.2024 காலை 10.30 மணிக்கு பேச்சுப்போட்டியும்,28.12.2024 காலை 10.30 மணிக்கு வினாடி வினா போட்டியும் புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகளில் அனைத்து தரப்பு வாசகர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்குறளின் ஏதேனும் ஐந்து அதிகாரங்களை திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொள்ளும் குழந்தைகள் பொருளுணர்ந்து, உச்சரிப்பு பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வோர் “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும். மேலும், போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரை புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நேரிலோ அல்லது 9965748300 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 9894052850 என்ற அலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் பெயர்களை 21.12.2024 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்குள் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முறையே ரொக்கப் பரிசாக ரூ.5,000/-, ரூ.3,000/-, ரூ.2,000/- வீதம் 31.12.2024 அன்று நடைபெற உள்ள நிறைவு விழாவில் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version