இந்தியா

Margazhi Makkalisai 2024: சென்னை மக்களே மார்கழியில் மக்களிசைக்கு ரெடியா..? இந்த ஆண்டு எங்கே, எப்போது தெரியுமா..?

Published

on

Margazhi Makkalisai 2024: சென்னை மக்களே மார்கழியில் மக்களிசைக்கு ரெடியா..? இந்த ஆண்டு எங்கே, எப்போது தெரியுமா..?

மார்கழியில் மக்களிசை 2024

Advertisement

இயக்குனர் ரஞ்சித் அவர்களின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக கடந்த மூன்று வருடங்களாக மார்கழியில் ‘மக்கள் இசை’ எனும் தலைப்பில் வாய்ப்பு தேடும், வாய்ப்பு மறுக்கப்பட்ட கலைஞர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பது போல இந்த மார்கழியில் ‘மக்களை இசை’ நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் விழாவில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் என்பதையும் தாண்டி சமூகத்துக்கு தேவையான புரட்சிகர பாடல்களையும், அரசியல் பாடல்களையும் இந்த ‘மார்கழியில் மக்களை இசை’ நிகழ்ச்சியானது. மார்கழி ‘மக்கள் இசை’ நடத்துவதற்கு காரணமே கலையோடு அரசியலையும் கொண்டு செல்வதை நோக்கம் என்கிறார்கள்.

நாட்டுப்புறம், பழங்குடி ராப், கானா இசை நிகழ்ச்சியானது நடைபெறும். தமிழகமெங்கும் இருந்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்கு கொள்கிறார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். இந்த வருடம் ‘மார்கழியில் மக்கள் இசை’யானது டிசம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களும் மயிலாப்பூர் சாந்தோம் பள்ளியில் நடைபெற உள்ளது.  மாலை 3 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த விழாவிற்கு அனுமதி இலவசம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version