இந்தியா
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
ஆர்.வாலெட் பயன்படுத்தி UTS மொபைல் ஆப் மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு 3% உடனடி கேஷ்பேக் திட்டத்தை ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ரயிலில் தினம் பயணிப்பவர்கள் சிரமமின்றியும் நீண்ட வரிசையில் நிற்பதை தடுப்பதற்கும், டிஜிட்டல் வளர்ச்சிக்காகவும் கொண்டுவரப்பட்டது UTS மொபைல் ஆப். இந்த ஆப் மூலம், வீட்டில் இருந்தபடியோ அல்லது ரயில் நிலையத்திற்கு பயணிக்கும் வழியிலோ தங்களின் ரயில் டிக்கெட்டை எடுத்துக்கொள்ளலாம். இதில் தற்போது ரயில்வே வாரியம் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரயில்வே வாரிய உத்தரவின்படி, 20 டிசம்பர் 2024 முதல் ரயில் பயணிகள் R-வாலெட் பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM மூலம் UTS டிக்கெட் எடுக்கும்போது, டிக்கெட் கட்டணத்தில் 3% கேஷ்பேக் வழங்கப்படும். இதற்கு முன்பு, R-வாலெட்டை ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3% சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
இந்த புதிய வசதி, அனைத்து வகையான முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை UTS மொபைல் செயலியில் உள்ள R-வாலெட் அல்லது ATVM மூலம் வாங்கும் ரயில் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.