இந்தியா

அகத்தியர் பிறந்தநாள்; சித்த மருத்துவத்தின் அவசியம் பற்றி 2 சக்கர விழிப்புணர்வு பேரணி

Published

on

அகத்தியர் பிறந்தநாள்; சித்த மருத்துவத்தின் அவசியம் பற்றி 2 சக்கர விழிப்புணர்வு பேரணி

அகத்தியர் பிறந்த நாளில் சித்த மருத்துவத்தின் அவசியத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலத்தை  முதலமைச்சர் ரங்கசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். புதுச்சேரி அரசு ஆயுஷ் துறையின் சித்த மருத்துவ பிரிவு சார்பாக அகத்தியர் பிறந்தநாள் சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட உள்ளது.சித்த மருத்துவ பிரிவை சார்ந்த மருத்துவர்கள், மருந்தாளர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் சித்த மருத்துவ சிறப்புகளை எடுத்துரைக்கும் முகமாக இருசக்கர விழிப்புணர்வு பேரணியானது புதுச்சேரி அரசு ஆயுஷ் இயக்குநரகத்தில் இருந்து புறப்பட்டது. பேரணியை முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார்.ஆயுஷ் துறை இயக்குனர் Dr.R.ஸ்ரீதரன் மற்றும் வில்லியனூர் ஆயுஷ் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளரும் தலைமை சித்த மருத்துவருமான Dr.S.இந்திரா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  சித்த மருத்துவ விழிப்புணர்வு பேரணியானது புதுவை சட்டசபை வளாகத்தில் தொடங்கி சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, அண்ணாசாலை வழியாக ஒதியஞ்சாலை நலவழி மையத்தை வந்து அடைந்தது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version