பொழுதுபோக்கு
சன் டி.விக்கு தாவிய விஜய் டி.வி வில்லி நடிகை: எதிர்நீச்சல் 2-ல் வில்லிதானா?
சன் டி.விக்கு தாவிய விஜய் டி.வி வில்லி நடிகை: எதிர்நீச்சல் 2-ல் வில்லிதானா?
எதிர்நீச்சல் சீரியலின், 2-ம் பாகம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு ப்ரமோ வெளியான நிலையில், இந்த சீரியலில், விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ளார்.சன்டிவியின் சீரியல்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் சிறப்பாக எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில், கோலங்கள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த இயக்குனர் திருச்செல்வம் இந்த சீரியலை இயக்கி வந்தார். கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, சத்யபிரியா உள்ளிட்ட பலர் தில் நடித்திருந்தனர்.இந்த சீரியலில் வில்லன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்து வந்த நிலையில், அதற்கு முன்பு அந்த கேரக்டரில் நடித்து வந்த இறந்த நடிகர் மாரிமுத்து இடத்தை பூர்த்தி செய்ய தவறிவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் காரணமாக கடந்த ஜூன் 8-ந் தேதி எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது.இதனிடையே சமீபத்தில் வெளியான எதிர்நீச்சல் சீரியலின் 2-ம் பாகத்திற்கான டீசரில், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை ஆகியோர் வரும் நிலையில், மதுமிதாவுக்கு பதிலாக நடிகை பார்வதி ஜனனி கேரக்டரில் நடித்துள்ளார். இதனிடையே, எதிர்நீச்சல் 2 சீரியலில், முதல் சீசனில், ஆதிரையாக நடித்த நடிகை சத்யா, தற்போது விஜய் டிவியின் தனம் சீரியலில் நடித்து நடித்து வருவதால் அவர் 2-வது சீசனில் நடிக்கமாட்டார் என்று கூறப்படுகிறது.அதேபோல் ஆதிகுணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் வேல ராமமூர்த்திக்கு பதிலாக வேறொரு நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் குழந்தை தாராவாக நடித்து வந்த ஃபர்சானாவும் சீரியலில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக பிரஜானா நடிக்க உள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. ஒளிபரப்புக்கு முன்பே யார் யார் நடிப்பார்? யார் விலகினார்? என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்தாலும், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் வில்லி ரோஹினி கேரக்டரில் நடித்து வரும் நடிகை சல்மா அருண், எதிர்நீச்சல் 2 சீரியலில் கமிட் ஆகியுள்ளார். ஜீ தமிழின் அமுதாவும் அ்ன்னலட்சுமியும் சீரியலில் வில்லியாக நடித்திருந்த இவர், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலிலும் வில்லியாக நடித்து வருகிறார். நடித்த இரு சீரியல்களிலும் வில்லியாக நடித்துள்ளதால், எதிர்நீச்சல் 2 சீரியலில் வில்லியாக நடிப்பாரா அல்லது பாசிட்டீவ் கேரக்ரில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.