இந்தியா
பேருந்தில் அத்துமீறிய நபரை ‘பளார்’ விட்ட பெண்.. வைரலாகும் வீடியோ!
பேருந்தில் அத்துமீறிய நபரை ‘பளார்’ விட்ட பெண்.. வைரலாகும் வீடியோ!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், பேருந்து பயணத்தின் போது தனக்கு அருகில் அமர்ந்திருந்தவர், தன்னை தவறாக தொட முயன்றதாக வீடியோவில் உள்ள பெண் குற்றம்சாட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அந்த நபரை அவர், இரு கன்னத்திலும் பளார் பளாரென 26 முறை அறைந்தார்.
பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நபர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அந்த பெண் அறைந்த போது, போதை ஆசாமி மன்னிப்பு கேட்ட காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவத்தின் போது பேருந்தில் இருந்தவர்கள், அந்த பெண்ணை தடுக்கவில்லை. பின்னர் நடத்துநர் அங்கு வந்து அப்பெண்ணை சமாதனம் செய்தார்.