இந்தியா

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்..!!

Published

on

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்..!!

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

Advertisement

இந்திய ரயில்வே சார்பில் வருகிற ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டு புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் நெல்லை-சென்னை இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து தினமும் இரவு 8.05 மணிக்கு புறப்படும் ரயில் (12632) இரவு 8.40 மணிக்கு புறப்படுகிறது. சென்னை எழும்பூருக்கு வழக்கம்போல் காலை 7 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12631) இரவு 8.40 மணி புறப்பட்டு, நெல்லைக்கு வழக்கம்போல் காலை 6.40 மணிக்கு வந்து சேருகிறது.பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி பகுதி பயணிகள் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இணைப்பு வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.

இந்த நிலையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் 8.40 மணிக்கு புறப்படும் என்பதால், செங்கோட்டையில் இருந்து மாலை வருகிற ரயில் பயணிகள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலிலை இரவு பிடிப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version