உலகம்

ரே மிஸ்டீரியோ சீனியர் காலமானர்!

Published

on

ரே மிஸ்டீரியோ சீனியர் காலமானர்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 21/12/2024 | Edited on 21/12/2024

லூச்சா லிப்ரே எனப்படும் தொழில்முறை மல்யுத்தம் மூலம் பிரபலமானவர் ரே மிஸ்டீரியோ சீனியர். வட அமெரிக்கவின் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் தியாஸ். ஆனால் இவர் தன்னை மல்யுத்த போட்டிகளில் ரே மிஸ்டீரியோ சீனியர் என்று அடையாளப் படுத்திக் கொண்டார். அதோடு மல்யுத்த போட்டியின்போது, தனது தனித்துவமான சண்டையை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார். 

வேர்ல்ட் ரெஸ்லிங் எண்டர்டெயின்மென்ட்(WWE) புகழ் ரே மிஸ்டீரியோ ஜுனியரின் உறவினரான ரே மிஸ்டீரியோ சீனியர்,  ரே மிஸ்டீரியோ ஜுனியரின் இளம் வயதில் அவருக்கு  மல்யுத்த பயிற்சியளித்துள்ளார். ரே மிஸ்டீரியோ சீனியர், உலக மல்யுத்த சங்கம் மற்றும் லுச்சா லிப்ரே AAA உலகளாவிய போன்ற முக்கிய அமைப்புகளுடன் சாம்பியன்ஷிப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இது வேர்ல்ட் ரெஸ்லிங் எண்டர்டெயின்மென்ட்(WWE) போட்டிகளுக்கு இணையாக கருதப்படுகிறது. ரே மிஸ்டீரியோ சீனியர் கடந்த 2009ஆம் ஆண்டு தொழில்முறை மல்யுத்த சண்டைகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். அதன் பின்பு கடைசியாக  2023ஆம் ஆண்டு குளோபல் லுச்சா லிப்ரேயில் மல்யுத்தம் போட்டியில் பங்கேற்று அதிலும் வெற்றி பெற்றிருந்தார்.  

Advertisement

இந்த நிலையில் ரே மிஸ்டீரியோ சீனியர் காலமானதாக அவரது மகன் தி சன் ஆஃப் ரே மிஸ்டீரியோ தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரின் முகநூல் பக்கத்தில், “நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, எனது தந்தை மிகுவல் ஏஞ்சல் லோபஸ் தியாஸ், கிங் மிஸ்டீரியோ சீனியர் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • ரே மிஸ்டீரியோ சீனியர் காலமானர்!

  • “நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது” – சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!

  • பாஜக நிர்வாகி கொலை; நீளும் விசாரணை – சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர்!

  • உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்; தமிழக அரசு முக்கிய முடிவு?

  • புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த விழிப்புணர்வு நடைபயணம்!(படங்கள்)

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version